2015ஆம் ஆண்டு, இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும் காப்பீடு வழங்கும் நோக்கத்தில், இந்திய அரசு பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என இரண்டு இன்சூரன்ஸ் திட்டங்களை அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டத்துக்கான ஆண்டு சந்தா தொகை உங்கள் தேர்வுப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனாவின் பிரீமியம் ரூ.436 ஆகும். இந்த தொகை, ஒவ்வொரு ஆண்டும் மே 31ஆம் தேதிக்குள், உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ஆட்டோ டெபிட் முறையில் பிடிக்கப்படும்.
நீங்கள் இந்த இன்சூரன்ஸ் திட்டத்தை தொடர விரும்பவில்லை என்றால், உங்கள் வங்கிக் கிளையை நேரிலோ அல்லது அதன் மூலம் தொடர்புகொண்டு, இந்த திட்டத்துக்கான ஆட்டோ டெபிட் செயல்முறையை நிறுத்த முடியும்.
தேவையான கோரிக்கைகளை வழங்கி, இந்த திட்டத்தின் கீழ் வரும் பிரீமியம் கட்டணத்தை நிறுத்தச் சொல்வதன் மூலம், இனிமேல் பிரீமியம் பிடிக்கப்படாமல் செய்யலாம். காலத்துக்குள் பிரீமியம் செலுத்தப்படவில்லையெனில், உங்கள் இன்சூரன்ஸ் பாலிசி தானாகவே ரத்து செய்யப்படும்.