இறந்து மூன்று நாட்கள் ஆகியும் பணத்திற்காக தனது மகள் இறந்ததை மருத்துவமனை நிர்வாகம் மறைத்ததாக குற்றம் சாட்டி உயிரிழந்த சட்டக் கல்லூரி மாணவி உறவினர்கள் மதுரை வேலம்மாள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு.
மதுரை மேலவாசல் பகுதியை சேர்ந்த பாண்டித்துரை மகள் பிரியதர்ஷினி (19) இவர் ராமநாதபுரத்தில் சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். கடந்த 10 ஆம் தேதி கீழ் மதுரை சந்திப்பில் தனது நண்பர்களுடன் ரயிலில் ஏறும்போது தவறி விழுந்து பின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனே சக மாணவர்கள் அவரை மீட்டு மதுரை அனுப்பானடியில் உள்ள வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அப்போது ஒன்றரை லட்சம் செலவாகும் என மருத்துவமனை தரப்பில் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது 16 நாட்கள் மாணவி சிகிச்சை பெற்று வந்த நிலையில் இதுவரை 6 லட்சம் ரூபாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பணம் செலுத்தியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த சட்டக் கல்லூரி மாணவி பிரியதர்ஷினியை கடந்த மூன்று தினங்களாக பார்ப்பதற்கு பெற்றோர்களை மருத்துவமனை அனுமதிக்க வில்லை என்றும் கூறப்படுகிறது
இந்த சூழலில், அவர் இறந்து மூன்று நாட்கள் ஆகியும் அதனை மறைத்து பணத்திற்காக தங்களிடம் தகவல் சொல்லாமல் இழுத்தடித்ததாக மூன்று நாட்களாக ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் கட்டியதாகவும். இன்று காலை மாணவி பிரியதர்ஷினி இறந்துவிட்டார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது சொல்லப்படுகிறது.
தனது மகள் இறந்ததை மருத்துவமனை நிர்வாகம் மறைத்ததாக குற்றம் சாட்டி உயிரிழந்த மாணவியின் பெற்றோர்கள் உறவினர்கள் சட்ட கல்லூரி மாணவர்கள் மதுரை வேலம்மாள் மருத்துவமனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர்.
அங்கு 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இது குறித்து மருத்துவமனை தரப்பில் விளக்கம் கேட்க முற்பட்டபோது மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.