Sunday, August 31, 2025

2 ரயில்களுக்கு நடுவே பாய்ந்தோடிய குதிரை

2 ரயில்களுக்கு நடுவில் பாய்ந்தோடிய குதிரையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

2022 ஆம் ஆண்டு, ஜனவரி மாதத் தொடக்கத்தில், எகிப்தில் ஒரு வெள்ளைக் குதிரை ஓடும் ரயிலுக்கும் நின்றுகொண்டிருந்த வண்டிகளுக்கும் இடையில் சிக்கிக்கொண்டது. அதைக்கண்டு ஓடும் ரயிலுக்குள் அமர்ந்திருந்த பயணிகள் பயத்தில் அலறத் தொடங்கினர்.

அதேசமயம், இரண்டு ரயில்களுக்கும் இடையில் நிற்காமல் மின்னல் வேகத்தில் குதிரை ஓடிக்கொண்டே இருந்தது. பின்னர், அருகிலுள்ள தண்டவாளத்திற்கு நகர்ந்தது. அது எவ்விதக் காயமும் அடையாமல் தப்பிச்சென்றதைப் பார்த்துப் பயணிகள் ஆரவாரம் செய்தனர்.

ஆபத்தான நிலையில் சிறிதளவும் பதற்றமின்றி ஓடி தப்பித்த குதிரையின் செயல் பலருக்கும் நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்துள்ளது.

சிரமங்களுக்கு மத்தியில் சிக்கிக்கொள்ளாதீர், உங்கள்மீது நம்பிக்கை வைத்து முன்னேறுங்கள் என்று பதிவிட்டுள்ளார் இந்த வீடியோவைத் தனது ட்டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஐபிஎஸ் அதிகாரி தீபன்ஷு கப்ரா.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News