தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நானி. இவரது நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் ஹிட் 3. சைலேஷ் கொலனு இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் ஹிட் 3 படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதனபடி இப்படம் உலகளவில் ரூ. 43 கோடி வசூல் செய்துள்ளது.
வெளிநாடுகளிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அங்கு மில்லியன் டாலர் வசூல் சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.