Wednesday, December 24, 2025

திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் படுகொலை

திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் பாலமுருகன் (வயது 30) மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் குமாரானந்தபுரம் காமராஜர் வீதியில் வசித்து வந்த இவர், இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு வழக்கறிஞர் பிரிவு ஒன்றிய தலைவராக இருந்துள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை மூன்று மர்ம நபர்கள் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல்துறை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்துள்ளனர்.

Related News

Latest News