பெட்ரோல், டீசல் விலை உயர்வு? இதனால் என்னென்ன பொருட்களின் விலை உயரும் தெரியுமா? இதோ முழுவிவரம்…

ஈரானில் நடைபெற்று வரும் போர் உலகளவில் எரிபொருள் விநியோகத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்தியா போன்ற நாடுகள் கச்சா எண்ணெய் தேவைக்காக பெரும்பாலும் வளைகுடா நாடுகளை சார்ந்துள்ளதால், இந்த நிலைமை பொருளாதார அழுத்தத்தை அதிகரித்துள்ளது.

இந்தியாவில் பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி போன்ற எரிபொருட்கள் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்திய பொதுத்துறை மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை வாங்கி, அதை சுத்திகரித்து விற்பனை செய்கின்றன.

சர்வதேச சந்தையில் விலை உயர்ந்தால் உள்ளூர் விலைகளும் உயர்வது வழக்கம். ஆனால் 2022ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை பெரிதாக மாற்றமின்றி இருந்தது. இந்நிலையில் ஈரான் போர் புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது. போர் தொடங்கிய பின்பு வளைகுடா பகுதிகளில் இருந்து எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டதால், ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து இந்தியா மாற்று இறக்குமதி மேற்கொள்கிறது. ஆனால் இந்த எண்ணெயை சுத்திகரிப்பதற்கு கூடுதல் செலவு தேவைப்படுகிறது.

இதன் விளைவாக சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 80 டாலரிலிருந்து 126 டாலராக உயர்ந்துள்ளது. இதனால் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹெச்பி போன்ற நிறுவனங்கள் கடும் நஷ்டத்தில் இயங்குகின்றன. இந்த நஷ்டத்தை சமாளிக்க விரைவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதன் தாக்கமாக போக்குவரத்து செலவுகள் உயர்ந்து, காய்கறி, பால், அத்தியாவசிய பொருட்கள், மற்றும் தினசரி பயன்பாட்டு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. பொதுமக்களின் வாழ்க்கைச் செலவு மேலும் உயரும் சூழல் உருவாகியுள்ளது.

Related News

Latest News