பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா என பலர் நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான படம் ‘கும்கி’. இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘கும்கி 2’ படத்தை பிரபு சாலமன் உருவாக்கியுள்ளார்.
இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.
படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். அண்மையில் வெளியான கும்கி 2 படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், கும்கி 2 படம் வரும் 14ம் தேதி வெளியாக இருந்த சூழலில், படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
ரூ.2.5 கோடி கடனை திருப்பி தராமல் கும்கி 2 படத்தை வெளியிடக்கூடாது என்று பைனான்சியர் சந்திர பிரகாஷ் தொடர்ந்த வழக்கில் இந்த வித்தரவு வழங்கப்பட்டுள்ளது.
