Thursday, May 29, 2025

எல்லையில் மீண்டும் ஹை அலர்ட்! இந்தியாவை சுத்துபோட்ட டிரோன்கள்! ஆனால் இந்த முறை பாகிஸ்தான் இல்லை!

டிரோன்களின் சத்தமும் வெடிகுண்டுகளின் இடி ஒலியும் ஓய்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதல் முடிவுக்கு வந்து சில வாரங்களே ஆகின்றன. இதற்கிடையே திடீரென இந்திய நேபாள எல்லையில் அலையலையாய் டிரோன்கள் நுழைந்துள்ள. நேபாளத்தில் இருந்து அத்துமீறி வந்த 20 ட்ரோன்கள் இந்திய எல்லைப் பகுதிகளில் சுமார் 40 நிமிடங்கள் வரை வட்டமடித்து நோட்டமிட்டதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தைய இந்தியா பாகிஸ்தான் மோதலின் சூடு இன்னமும் தணியாத நிலையில் நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு நுழைந்த இந்த ட்ரோன்கள் சுமார் 40 நிமிடங்கள் வரை மதுபனி மாவட்டத்தில் உள்ள கம்லா எல்லைப் பகுதிகளில் பறந்தது ஆபத்தான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. அதன் பிறகு அவை மீண்டும் வந்த வழியிலேயே பறந்து நேபாளத்திற்குத் திரும்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதைப்பற்றி இந்திய நேபாள எல்லையைப் பாதுகாப்பு பொறுப்பில் உள்ள சஷாஸ்திர சீமா பால் படையின் துணை கமாண்டன்ட் விவேக் ஓஜா கூறுகையில், கம்லா எல்லையில் இதுபோல 15 முதல் 20 ட்ரோன்கள் திடீரென இந்தியப் பகுதியில் நுழைந்தன. இதனையடுத்து இந்திய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதோடு தர்பங்கா விமானப்படை மற்றும் டெல்லி விமானப்படைத் தளங்களுக்குத் தகவல் அனுப்பப்பட்டு சர்வதேச எல்லையில் ஹை அலர்ட் அறிவிக்கப்பட்டது” என்றார்.

மட்டுமல்லாமல், இந்த பரபரப்பு சம்பவத்தையடுத்து எல்லைப் பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருவதாக எல்லையோர கல்காலியா போலீஸ் நிலைய அதிகாரி ராகேஷ் குமார் தெரிவித்திருக்கிறார். மேலும் நேபாளத்தில் இருந்து வருவோர் தீவிரமாகச் சோதனை செய்யப்படுவதாகவும் இதற்காக மோப்ப நாய்கள், ஸ்கேனிங் கருவிகளை பயன்படுத்தி நேபாளத்திலிருந்து வரும் வாகனங்களைத் தீவிரமாகச் சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news