ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் அருகேயுள்ள அரசு மருத்துவமனை கழிவறையில் ரகசியமாக கேமரா ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இதை பெண் டாக்டர்கள் கண்டுபிடித்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனை மேலாளரிடம் புகார் அளித்ததையடுத்து, போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ரயான் சோ (வயது 28) என்ற டாக்டர் இரவு நேரத்தில் கழிவறைக்குள் சென்று வருவதை கண்டு பிடித்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தி ஆபாச படம் எடுத்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
2021-ம் ஆண்டு பயிற்சி டாக்டராக பணியில் சேர்ந்ததில் இருந்து இதில் ஈடுபட்டுள்ளார். அவருடைய செல்போன் மற்றும் மடிக்கணினிகளில் இருந்த 4,500 வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன. தற்போது ரூ.28 லட்சம் பிணைத்தொகை செலுத்தப்பட்டதன்பேரில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.