கடந்த பிப்ரவரி மாதம் கோயம்புத்துாரில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக திருப்பதி வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கர்ப்பிணி பெண் ஒருவர் பயணித்துள்ளார். அங்கு போதையில் இருந்த சிலர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
அப்போது இளம் பெண் கூச்சலிட்டதால் போதை நபர்கள் இளம்பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். தண்டவாளத்தின் அருகே படுகாயத்துடன் இருந்த இளம் பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ஹேமராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணை முடிந்த நிலையில், ஹேமராஜ் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. அவனுக்கான தண்டனை விவரம், வரும் திங்கட்கிழமை( ஜூலை 14) அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.