Saturday, January 31, 2026

இந்தியாவின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை “ஹெலினா” சோதனை வெற்றி

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் ” ஹெலினா ஏவுகணை” சோதனையில் வெற்றிபெற்றுள்ளது.

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாராகும் இந்த ஏவுகணை ஹெலிகாப்டரில் இருந்து பாய்ந்து சென்று எதிரிகளின் பீரங்கிகளை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டது.

இந்தநிலையில் , லாடாக்கின் உயர்மட்டத்தில் ஹெலினா ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. ஹெலினா ஏவுகணை இலகு ரக ஹெலிகாப்படரில் இருந்து ஏவப்பட்டது. அது துல்லியமாக பாய்ந்து சென்று பீரங்கிகளை தாக்கியது. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததாக மத்திய ராணுவ அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்த ஏவுகணையை இரவு, பகல் பாராமல் எந்த கால நிலையிலும் பயன்படுத்தலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஏவுகணை உலகில் மிகவும் மேம்படுத்தப்பட்ட பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்களில் ஒன்றாக திகழ்கிறது.

இந்த சோதனையின் வீடியோ அதிகாரப்பூர்வ வளைத்தபக்கத்தில் பகிரப்பட்டுஉள்ளது.

Related News

Latest News