நெல்லை மாவட்டத்தில் அதி கனமழை கொட்டித்தீர்த்ததால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, நெல்லை மாவட்டத்தின் மலைபகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திந்தது. ஆனால், கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டத்தில் அதி கனமழை கொட்டித்தீர்த்தது.
அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 23 சென்டி மீட்டர் மழையும், நாலுமுக்கு பகுதியில் 21 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. காக்காசியில் 19 சென்டி மீட்டர் மழையும், மாஞ்சோலையில் 17 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த அதி கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
