வடமேற்கு பாகிஸ்தான் மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த 48 மணி நேரத்தில் 307 பேர் உயிரிழந்துள்ளனர். மேகவெடிப்பு மற்றும் வெள்ளப்பெருக்கால் இந்த உயிரிழப்பு நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் நிவாரணப் பணிகளுக்கு அவசர நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளது. வருகிற 21ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.