தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, வரும் ஜனவரி 9ஆம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜனவரி 10ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் நேற்று மாலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த நிலையில், அது இன்று மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
