வடதமிழகத்தில் இன்று(நவ. 4) இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வடதமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், மயிலாடுதுறை, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் இன்று (நவம்பர் 4) இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் வடதமிழகத்தில் வெப்பநிலை சற்று குறையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மழை காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்களில் வானிலை மேகமூட்டத்துடன், சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும். மேலும், தமிழகத்தில் சில பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு மழை தொடரக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, நவம்பர் மாதம் வெப்பநிலை இயல்பிற்கு ஒப்பிடும்போது குறைய வாய்ப்பு உள்ளது. மற்றபடி, தமிழகத்தின் பிற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என கூறப்பட்டுள்ளது.
