Saturday, December 27, 2025

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழக உள் பகு​தி​களின்​மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நில​வு​கிறது. இதன் காரண​மாக இன்​றும், நாளை​யும் (நவ.6, 7) தமிழகத்​தில் ஒருசில இடங்​களில் இடி, மின்​னலுடன் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஒருசில பகு​தி​களில் இடி, மின்​னலுடன் லேசானது முதல் மித​மான மழை பெய்ய வாய்ப்பு உள்​ளது.

இன்று அரியலூர், பெரம்​பலூர், திருச்​சி, கள்​ளக்​குறிச்​சி, திரு​வண்​ணா​மலை, சேலம், தரு​மபுரி, கிருஷ்ணகிரி, திருப்​பத்​தூர் மாவட்​டங்​களி​லும், நாளை ராம​நாத​புரம், சிவகங்​கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்​டுக்​கல் மாவட்​டங்​களி​லும், ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்​ளது.

Related News

Latest News