கோடைக்காலம் தொடங்கி விட்டதால், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பல இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது.
வெயில் காலங்களில் காலங்களில் வெளியே செல்லும்போது உடல் சோர்வு, வியர்வை அதிகரிப்பு, தலைசுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். சில நேரங்களில் சளி, காய்ச்சல் போன்ற தொற்றுகளும் வந்துவிடக்கூடும்.
இதனை தவிர்க்க என்ன செய்யலாம்?
வீட்டில் இருந்து வெளியே செல்லும் முன் போதுமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலில் நீர் இழப்பைத் தடுக்கும். அத்துடன், வெளியே செல்லும் போது தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
வெயிலில் செல்லும் போது தலையை துணி அல்லது ஸ்கார்ப் கொண்டு மறைப்பது நல்லது. இது வெப்பத்தால் ஏற்படும் தலைவலி மற்றும் உடல் சோர்வை குறைக்கும்.
உடலில் நீர்சத்து குறையாமல் இருக்க இயற்கையான பானங்களை அதிகம் அருந்துங்கள். இளநீர், மோர், வெள்ளரிக்காய் நீர், பழச்சாறு போன்றவை உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். பழங்கள், காய்கறிகள், மற்றும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை இந்த நேரங்களில் அதிகளவில் எடுத்துகொள்வது நல்லது.