ராகுல்காந்தி இதுவரை 95 தோல்வியை சந்தித்துள்ளார். தமிழ்நாடில் தேர்தல் வரும் போது 100 வது தோல்வியை சந்திப்பார் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் திருவேற்காட்டில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், 2024 மக்களவை தேர்தலில் 40 தொகுதியில் வெற்றிப்பெறும் போது தேர்தல் ஆணையத்தின் நடுநிலை குறித்து பேசாத ஸ்டாலின், தற்போது பீகார் தேர்தலில் பாஜக வெற்றிக்கு பின் பேசுகிறார் என விமர்சித்தார். தொடர்ந்து தோல்வி அடைந்து வரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாட்டில் 100 வது தோல்வியை சந்திப்பார். கட்சி தொடங்கினால் உடனடியாக முதலமைச்சராகி விடலாம் என்று நினைப்பவர்களுக்கும் பீகார் தேர்தல் ஒரு பாடமாக இருக்கும் என்று தமிழிசை சௌந்தர்ராஜன் கூறினார்.
