கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் வரவழைத்து ஆறுதல் கூற முடிவெடுத்தார். அதன்படி நேற்று (அக்டோபர் 27) மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதிக்கு வரவழைத்து த.வெ.க. தலைவர் விஜய் ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் விஜய் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு அழுததாக அங்கு சென்ற பெண் ஒருவர் கூறினார். கரூர் வந்தடைந்த உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், மாமல்லபுரத்தில் விஜய் தங்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாகக் கூறியுள்ளனர்.
‘முதலில் எங்களைப் பார்த்தவுடன் விஜய் எங்களிடம் மன்னிப்பு கேட்டார். பிறகு, என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான அனைத்தையும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக நான் செய்து தருகிறேன். என்னை தயவுசெய்து மன்னித்துவிடுங்கள் என்று கூறியதாக அந்த பெண் கூறியுள்ளார்.
