இந்தியாவில் UPI சேவையை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் HDFC வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, HDFC வங்கி செப்டம்பர் 13, 2025 சனிக்கிழமை அதிகாலை 12:30 மணி முதல் காலை 7:30 மணி வரை திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும். பராமரிப்புப் பணிகளின் போது, HDFC வங்கி PayZapp Wallet-ஐப் பயன்படுத்த பரிந்துரைக்கிறது.
இந்த பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் நெட்பேங்கிங் மற்றும் மொபைல்பேங்கிங் சேவைகளும் கிடைக்காது. எச்டிஎப்சி வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்ட யுபிஐ சேவைகளை கொண்ட வணிகர்களும் இடையூறுகளை சந்திப்பார்கள்.
ஏடிஎம் பணம் எடுப்பது மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகள் கட்டுப்படுத்தப்பட்ட வரம்புகளுடன் தொடரும். மேலும் இருப்பு விசாரணை, பின் மாற்றங்கள், அட்டைத் தடுப்பு மற்றும் ஹாட்லிஸ்டிங் போன்ற நிதி சாராத சேவைகள் தொடர்ந்து கிடைக்கும்.