PAN கார்டு என்பது வருமான வரித்துறையால் வழங்கப்படும் 10 இலக்க எண். வங்கி கணக்கு துவங்க, பங்குச் சந்தையில் வணிகம் செய்ய, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய மற்றும் தங்கம் முதலிய சொத்து வாங்க PAN எண் அவசியம். மேலும் சேமிப்பு, நடப்பு அல்லது நிரந்தர வைப்புக்கு பான் கார்டு தேவை. கடன் அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போதும் வங்கி PAN கார்டு கேட்கும்.
அது மட்டுமல்லாமல் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யவும் இது தேவை.மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய PAN கார்டு முக்கியம். இது முதலீடு மற்றும் மூலதன ஆதாயத்தைக் கண்காணிப்பதற்கு மட்டுமல்லாமல் கடன் பத்திரத்தில் முதலீடு செய்தாலும் PAN தேவை.
PAN என்ற நிரந்தர கணக்கு எண் மத்திய நேரடி வரிகள் வாரியம் மேற்பார்வை செய்வதோடு அடையாள ஆவணமாகவும் செயல்படுகிறது. 2 லட்சத்துக்கு மேல் தங்கம் வாங்க PAN கார்டு அவசியம். மட்டுமல்லாமல் வரி மோசடியை தடுக்க PAN எண் உதவுகிறது. மேலும் 10 லட்சம் அல்லது அதற்கு மேல் சொத்து வாங்க PAN கார்டு தர வேண்டும். இது குடியிருப்புக்கும் பொருந்தும்.
சொத்து விற்றல், விற்பனை பத்திரத்தில் பான் கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும். PAN எண் மூலதன ஆதாயத்தை கண்காணிக்க உதவும். வீட்டுக் கடன் வாங்கும்போது, வங்கி பான் கார்டு கேட்கும். வாடகை ஒப்பந்தத்திற்கும் பான் கார்டு அவசியம்.
ஒரு வேளை உங்கள் PAN கார்டு Update செய்யப்பட்டிருக்காவிட்டால் மேற்சொல்லப்பட்ட எதையும் செய்ய முடியாமல் முடங்கும் நிலை வரக்கூடும். அதை தவிர்க்க வேண்டுமென்றால் PAN கார்டை Update செய்து வைத்துக்கொள்வது கட்டாயமாகிறது.