பொதுவாக, வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்த 4-5 வாரங்களில், வருமான வரி ரீஃபண்ட் கிடைத்துவிடும். சிலருக்கு இன்னும் கிடைக்காமல் இருக்கும். இவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
eportal.incometax.gov.in வலைதளத்திற்குள் செல்லவும்.
உங்களுடைய பயனர் ஐ.டி மற்றும் பாஸ்வேர்டை வைத்து ‘Log in’ செய்யவும்.
ஹோம் பேஜில் இருக்கும் ‘e-File’-ஐ கிளிக் செய்யவும்.
Income Tax Returns > View Filed Returns என அடுத்தடுத்து தேர்ந்தெடுக்கவும்.
இதில் நீங்கள் எந்த ரீஃபண்ட் ஸ்டேட்டஸை செக் செய்ய வேண்டுமோ, அதை கிளிக் செய்யவும். இப்போது உங்கள் ரீஃபண்ட் எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம்.
