டிஜிட்டல் மையமாக மாறிப் போன வாழ்க்கையில் நாம் ஒருநாளில் அதிகமாக பணத்தை அனுப்ப மற்றும் பெற Gpay, Phonepe மற்றும் Paytm போன்ற UPI செயலிகளை நம்பி இருக்கிறோம்.
இந்த appகளில் ஒருவருக்கு பணம் அனுப்ப நினைத்து இன்னொருவருக்கு பணம் அனுப்பி விட்டால் எப்படி சுலபமாக refund பெறுவது என்பதை இப்பதிவில் பார்ப்போம். தவறான பணப் பரிவர்த்தனையின் screenshot எடுத்து, பணம் அனுப்பிய UPI செயலியின் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு மெசேஜ் அனுப்பலாம்.
சரியான பதில் வரவில்லை அல்லது பணம் கிடைக்கவில்லை என்றால் ஆர்பிஐ அமைப்பின் அதிகாரப்பூர்வ வலைதளமான npci.org.inஇல் “What we do tab ” என்ற பக்கத்திற்கு சென்று, பின்னர் “UPI” optionஐத் தேர்ந்தெடுத்து, “Dispute Redressal Mechanism” என்ற optionஐ click செய்யவும்.
அதில் இருக்கும் புகார் பெட்டியில் தவறான பரிவர்த்தனையின் விவரங்களான UPI ஐடி, வங்கி பெயர், விர்ச்சுவல் பேமெண்ட் முகவரி, மாற்றப்பட்ட தொகை, பரிவர்த்தனை தேதி, மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை பதிவிட்டால் 24இல் இருந்து 48 மணி நேரத்திற்குள் பணம் திரும்பக் கிடைக்கும்.
இப்படி செய்தும் பணம் கிடைக்கவில்லை என்றால் நேரடியாக ஆர்பிஐ பக்கத்தில் உள்ள புகார் தளத்தில் புகார் அளித்து பணத்தை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.