தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலி பகுதியில், புதிய குடிநீர் நீர்த்தேக்கம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், பழைய மாமல்லபுரம் சாலைக்கும் கிழக்கு கடற்கரை சாலைக்கும் இடையிலான கோவளம் உபவடிநிலப் பகுதியில், 5,161 ஏக்கர் பரப்பளவில் ரூ.342 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் இந்த நீர்த்தேக்கம் அமைக்கப்படுகிறது. இந்த புதிய நீர்த்தேக்கத்திற்கு ‘மாமல்லன்’ என்று பெயர் சூட்டப்பட்டு, பணிகளை முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், 1967 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து 2011 வரை தமிழ்நாட்டில் மொத்தம் 43 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் கட்டப்பட்டுள்ளன என்றும், உப்பாறு, சிற்றாறு, சோலையாறு, பரப்பலாறு, வைகை துணை நீர்த்தேக்கங்கள், சோத்துப்பாறை, மோர்தானா, இருக்கன்குடி, நல்லதங்காள் உள்ளிட்ட பல நீர்த்தேக்கங்களை உருவாக்கிய பெருமை கலைஞருக்கே சேரும் என தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள்
சிற்றாறு 1
சிற்றாறு 2
பெருவாரிப்பள்ளம்
சோலையாறு
பொன்னணியாறு
கருப்பாநதி
இராமநதி
பரப்பலாறு
மேல்நீராறு
பிளவக்கல் கோவிலாறு
பிளவக்கல் பெரியாறு
குடகணாறு
பாலாறு பொருந்தலாறு
குண்டேரிப்பள்ளம்
வரதமாநதி
வட்டமலைகரை ஓடை
மருதாநதி
வரட்டுப்பள்ளம்
கீழ்நீராறு
குண்டாறு
குதிரையாறு
ஆணைக்குட்டம்
இராஜாத்தோப்பு
சோத்துப்பாறை
மோர்தானா நீர்த்தேக்கம்
அடவி நயினார்
பொய்கையாறு
வடக்கு பச்சையாறு
சாஸ்தா கோவில்
கடனா நதி
நம்பியாறு
சண்முகா நதி
மிருகண்டா நதி
கமண்டல நதி
வண்டல் ஓடை
ஆண்டியப்பனூர்
நல்லதங்காள்
நங்கஞ்சியாறு
சிறுமலையாறு
இருக்கன்குடி
குப்பநத்தம்
மாம்பழத்துறை ஆறு
