மெல்ல கொல்லும் விஷமாக மாறும் Lipstick! பெண்களே உஷார்

209
Advertisement

அதிக பிரபலமான மேக்கப் பொருளான லிப்ஸ்டிக்கை ஒரு முறை கூட பயன்படுத்தாத பெண்களை காண்பது அரிது. அதிலும், ஏற்கனவே பயன்படுத்த தொடங்கிய பெண்கள் லிப்ஸ்டிக் போடும் பழக்கத்தை விடுவது அதை விட அரிது.

ஆனால், அழகே ஆபத்து என்பது போல அசத்தும் நிறங்களுடன், கண்களை கவரும் லிப்ஸ்டிக்களுக்குள் அச்சுறுத்தும் அமிலங்கள் பல நிறைந்துள்ளன. கலிஃபோர்னியா பல்கலைகழகத்தில் Berkeley School of Public Health நடத்திய ஆய்வில் பரவலாக பயன்படுத்தப்படும் Lipstick மற்றும் Lipglossகளில் க்ரோமியம் (Chromium), லெட்(Lead), அலுமினியம் (Aluminium), கேட்மியம் (Cadmium) உள்ளிட்ட பல நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

லிப்ஸ்டிக்கில் உள்ள Polyethelyene Glycols நரம்பு மண்டலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. Paraben சேர்க்கப்பட்ட லிப்ஸ்டிக் உபயோகிப்பதால் வயிற்றுப்போக்கு மற்றும் மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. லிப்ஸ்டிக்கள் கெட்டுப்போகாமல் இருக்க சேர்க்கப்படும் Bismuth Oxychloride என்ற கெமிக்கல் புற்றுநோய் உண்டாக்க கூடும் என தெரியவந்துள்ளது.

இருமல், கண் எரிச்சல், மூச்சு வாங்குதல் மற்றும் பல ஒவ்வாமைகள் ஏற்படுத்தக்கூடிய லிப்ஸ்டிக்களில் உள்ள பல்வேறு பொருட்கள் கேன்சர் வர வழிவகுக்கும் என்பதால், பயன்படுத்தும் லிப்ஸ்டிக்கில் என்னென்ன உட்பொருட்கள் உள்ளது என ஆராய்ந்து பார்ப்பது அவசியம்.

லிப்ஸ்டிக்கில் உள்ள பெட்ரோகெமிக்கல்கள் மூளையின் செயல்திறன் மற்றும் இனப்பெருக்க ஆற்றல்களையும் மட்டுப்படுத்துவதாக ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. லிப்ஸ்டிக்ளில் உள்ள Cadmium மற்றும் Chromium வயிற்றில் கட்டிகள் மற்றும் சிறுநீரக செயலிழப்பு உருவாக காரணமாக அமையும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

Dark colour லிப்ஸ்டிக்களில் அதிக நச்சுத்தன்மை இருக்கும் என கூறப்படுகிறது. பெட்ரோலியம் ஜெல்லி தடவி பின் லிப்ஸ்டிக் போட்டால் பாதிப்பு குறைவாக இருக்கும். நச்சு உட்பொருட்கள் இல்லாத Toxin free மற்றும் இயற்கையான லிப்ஸ்டிக் வகைகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.

கருச்சிதைவு பாதிப்பை தடுக்க கர்ப்பிணி பெண்கள் லிப்ஸ்டிக் போடுவதை தவிர்ப்பது நல்லது. நாள் முழுவதும் லிப்ஸ்டிக்கை touch up செய்து கொண்டிருப்பதால் உடலுக்குள் அதிக நச்சுப்பொருட்கள் ஊடுருவக்கூடும் என்பதால் பாதுகாப்பான, இயற்கையான லிப்ஸ்டிக் வகைகளை உபயோகித்தாலும் கூட அதிகப்படியான பயன்பாட்டை குறைத்து கொள்வதே சிறந்தது என ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.