பொதுவாக நம் அனைவரும் வாசனைக்காகவும் சிறு சிறு பூச்சிகளை அழிப்பதற்காகவும் அந்துருண்டையை வீட்டில் ஆங்காங்கே வைத்திருப்போம் இதை ஆங்கிலத்தில் ‘NAPTHELENE BALLS” என்று கூறுகிறார்கள்.
இந்த உருண்டைகள் காற்றில் கரையக்கூடிய ஒன்றாகும்.இந்த உருண்டைகள் தாரை உருக்கும்பொழுது அதிலிருந்து கிடைக்கும் நப்தலினால் உருவாக்கப்பட்டது,இந்த உருண்டையிலிருந்து வெளிவரும் வாயு பூச்சிகளை மாட்டும் கொள்ளவில்லை நம் உயிரையும் மெதுவாக கொன்றுவருகிறதென்று தான் சொல்லவேண்டுண்டும்.
முக்கியமாக குழந்தைகளுக்கு உபயோகப்படுத்தும் துணிகளில் அதை வைக்காதீர்கள்,அப்படி வைக்கும்பட்சத்தில் குழந்தைகளுக்கு ரத்த சோகை ஏற்படுகிறதாம்.
கர்ப்பிணி பெண்கள் இதனை சுவாசிக்கும்பொழுது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இது அதிகப்பாதிப்பை ஏற்படுத்துகிறதாம் குறிப்பாக கருச்சிதைவு ஏர்படுவது,குழந்தைகளின் அறிவுத்திறன் குறைதல் ,மரபணு பிரச்சனை போன்றவை ஏற்படுகிறதாம்.
குழந்தைகளுக்கு தேவைப்படும் சத்துக்களை குறைத்து புற்றுநோய் வர வழிவகுக்கிறதாம்,ரத்தத்தில் உள்ள சிகப்பணுக்களின் ஹீமோகுளோபின் அளவை குறைத்து சிறுநீரகம்,கல்லிரல் போன்றவற்றை பதிக்கிறதாம்.
இதுமட்டுமல்லாமல் மனிதனுக்கு தலைவலி,தலைசுற்றல் ,ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் ஏற்படுத்திவிடுகிறதாம்.
இந்த உருண்டைகளை சில நாடுகள் தடை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.