அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த கட்சியின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன், நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை 10 நாள்களுக்குள் மீண்டும் இணைப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.
அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் விடுவிக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பொறுப்புகள் பறிக்கப்பட்ட நிலையில் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை.
இந்நிலையில் அதிமுக கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கியதால் மகிழ்ச்சி அடைகிறேன் என செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார்.