கனமழையால் தள்ளிவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகளை, நாளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையால் , பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையானது வழங்கப்பட்டது. இதனால் அந்த நாட்களில் நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் தள்ளிப் போனது.
இந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வை நாளை நடத்த வேண்டும் என்று பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கும், தொடக்கக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.