இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது திருப்பரங்குன்றம் கோயில் தீபம் ஏற்றும் சர்ச்சை தொடர்பான கேள்விக்கு பதில அளித்த அமைச்சர் சேகர்பாபு, பாரதிய ஜனதா கட்சியினர் வட மாநிலங்களில் வேண்டுமென்றால் அவர்கள் நினைத்த மாதிரியான காரியங்கள். செயல்பாடுகள் ஈடேரலாம். ஆனால் இங்கு அவர்களின் கனவு பகல் கனவாக தான் இருக்கும். இது போன்ற செயல்களை நிச்சயம் தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அ.தி.மு.க-வில் ஆளாளுக்கு ஒரு கோணத்தில் பயணித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக பா.ஜ.கவின் அடிமையாகி விட்டது அ.தி.மு.க. எச்.ராஜா போன்ற தரம் தாழ்ந்த அரசியல்வாதி தமிழ்நாட்டில் இருப்பது சாபக்கேடு. அவர் சொல்வதை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளக் கூடாது” என தெரிவித்துள்ளார்.
