Saturday, August 2, 2025
HTML tutorial

ஹெச்.ராஜா, அண்ணாமலை போன்றவர்கள் கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள் – அமைச்சர் சேகர் பாபு

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நேற்று நடந்தது தேவையற்ற போராட்டம். ஆட்சிக்கு அபாயத்தை உருவாக்கும் வகையில் பாஜக போராட்டம் நடத்தியது. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பா.ஜ.க. செயல்படுகிறது.

தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் நோக்கில் பாஜக செயல்படுகிறது. தமிழ்நாட்டில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையோடு இருக்கின்றனர். ஒற்றுமையாக உள்ள மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்து வருகிறது. இனத்தால், மதத்தால், மொழியால் பிரச்சினையை ஏற்படுத்துவதே எச்.ராஜாவின் நோக்கம்.

திராவிட மண்ணில் பிரிவினை ஏற்படுத்த முயற்சிக்கும் பாஜகவை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஹெச்.ராஜா, அண்ணாமலை போன்றவர்கள் வடமாநிலங்களில் ஏற்படுவதுபோல் இங்கேயும் கலவரத்தை ஏற்படுத்த நினைகிறார்கள். ஆனால் பெரியார் மண்ணில் அது ஒரு காலமும் நடக்காது என அவர் கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News