தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் ஜி.வி., பிரகாஷ் குமார். இவருடைய மனைவி சைந்தவி. ஒரு மகள் உள்ள நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தாங்கள் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர்.
இந்நிலையில் தங்களுக்கு விவாகரத்து கோரி சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அப்போது ஜி.வி. பிரகாஷ், சைந்தவி, இருவரும் நேரில் ஆஜராகி, இருவரும் மனமுவந்து பிரிவதாகத் தெரிவித்தனர்.