கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே ஆண்டிப்பட்டி கோட்டை பகுதியில் விரேந்தர் சிங் (24), ஆனந்தகுமார் ஆகியோர் சேலத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் செல்லும்போது, ஆண்டிப்பட்டி கோட்டை அருகிலேயே வாகனம் பஞ்சர் ஆகி நின்று கொண்டிருந்தது.
அருகில் இருந்த பஞ்சர் கடைகாரர் காரை பஞ்சர் ஒட்டி கொண்டிருந்த பொழுது சந்தேகிக்கும் வகையில் காரில் மூட்டைகள் இருந்ததால் அரவக்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் அரவக்குறிச்சி போலீசார் அங்கு சென்றபோது அங்கிருந்து ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் காரின் முன்பக்க சீட்டுகளிலும், வாகனத்தின் பின்புறம் மூட்டைகள் இருந்ததை பார்த்துவிட்டு அரவக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு சொகுசு காரை காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். அந்த காரில் சுமார் ரூ. 1,64,000 மதிப்புள்ள குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விரேந்தர் சிங் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.