திருவாரூரில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 150 கிலோ எடை கொண்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட திருக்கொட்டாரம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை மறித்து சோதனை செய்தனர்.
அப்போது அதிலிருந்த சாக்கு மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 150 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மகேந்திரன், விஜயகுமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
