Sunday, December 21, 2025

தென் ஆப்பிரிக்காவில் துப்பாக்கி சூடு : 9 பேர் பலி, 10 பேர் படுகாயம்

தென் ஆப்பிரிக்காவின் பெக்ஹர்டெல் நகரில் இரவு நேர கேளிக்கை விடுதி உள்ளது. இந்த கேளிக்கை விடுதியில் இன்று அதிகாலை வாடிக்கையாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

இந்த கேளிக்கை விடுதிக்கு கார்களில் வந்த 12 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்திவிட்டு காரில் தப்பித்து சென்றனர். இந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், துப்பாக்கி சூடு நடத்திய 12 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related News

Latest News