ஆஸ்திரேலியாவில், சிட்னி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.17 மணியளவில் (ஆஸ்திரேலிய நேரப்படி இரவு 7.47) இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக ஆஸ்திரேலிய போலீசார் தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
