Saturday, September 27, 2025

GST வரி குறைப்பு: AC, TV.க்களின் விற்பனை அதிகரிப்பு

GST 12%, 28% வரி அடுக்குகள் நீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரி குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியானது. அதாவது முதல் மொபைல், ஏசி, கார், டிவி ஆகியவைகளின் விலைகளும் குறையும் என்பதால் அதனை வாங்க வேண்டும் என்று பொதுக மக்கள் நினைப்பார்கள். இதற்காக செப்டம்பர் 22-ந்தேதிக்காக காத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து GST சீரமைப்பு நேற்று முதல் அமலுக்கு நிலையில், GST மறுசீரமைப்பு நடவடிக்கையால் 375 பொருட்களின் விலை குறைந்துள்ளது. மேலும், அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில், GST சீரமைப்பு அமலுக்கு வந்த முதல் நாளான நேற்று நாட்டின் பல்வேறு நகரங்களில் ஏ.சி., டி.வி.க்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக வர்த்தக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் வரும் காலம் பண்டிகை நாட்கள் நெருங்கி வருவதால், விலை மற்றும் GSTகுறித்த குழப்பம் தெளிவான பின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News