Monday, January 26, 2026

ஆளுநர் தேநீர் விருந்தில் எல்.கே.சுதீஷ் – நயினார் நாகேந்திரன் சந்திப்பு : கூட்டணி பேச்சா?

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று தேநீர் விருந்து நடைபெற்றது.

இந்நிலையில், ஆளுநர் தேநீர் விருந்தில் கலந்துகொண்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசியுள்ளார். அவர்கள் சுமார் 10 நிமிடங்கள் பேசியதாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியுடனும் அதிமுக – பாஜக நிர்வாகிகள் பேசினர். இதனால் கூட்டணி குறித்த புதிய அறிவிப்புகள் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related News

Latest News