கடந்த 2023-ம் ஆண்டில், தமிழ்நாடு சட்டசபையில் அரசு கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி அப்படியே படிக்காமல், சில திருத்தங்களை மேற்கொண்டு வாசித்தார்.
தான் கேட்டுக்கொண்டபடி தேசிய கீதத்தை அவை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கவில்லை என்ற காரணத்தை கூறி 2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் ஆளுநர் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல் புறக்கணித்தார்.
தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை புரிந்தார். இந்நிலையில் இந்த ஆண்டும் ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்.
இதையடுத்து பேசிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். தற்போது முதல்வர் மு.க ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார்.
