Friday, December 26, 2025

தமிழகத்தில் பாஜகவை வளர்க்க ஆளுநர் ஆர்.என்.ரவி முயன்று வருகிறார் – திருமாவளவன்

திருவள்ளுவர், பாரதி என அனைத்தையும் சனாதனத்தோடு இனைத்து பேசி தமிழகத்தில் பாஜகவை வளர்க்க ஆளுநர் ஆர்.என்.ரவி முயன்று வருவதாக விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.

பெரம்பலூரில் நடைபெற்ற விசிக இல்ல திருமண நிகழ்வில் திருமாவளவன் பங்கேற்று பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆளுநரின் மாய அரசியலெல்லாம் தமிழக மக்களை மயங்க செய்யாது என கூறினார்.

ஒரிசாவில் நவின் பட்னாயக்கை எதிர்த்து தமிழரை வெற்றியடைய செய்யலாமா என தமிழரை விமர்சித்த அமித்ஷா, இன்று திருவள்ளுவரின் பக்தர் மோடி என கூறுவது தேர்தல் அரசியலுக்கான கருத்து எனவும் விமர்சித்தார்.

Related News

Latest News