சேலம் அருகே 5 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஓமலூர் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் நான்கு மற்றும் ஐந்து வகுப்பு படித்து வரும் ஐந்து மாணவிகளிடம் ஆசிரியர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, தலைமை ஆசிரியருக்கு புகார் சென்றது.
இது குறித்து விசாரணையில் நடத்தியதில் அந்த ஆசிரியர் தங்கவேல் என்பது உறுதியானது. இதனை அடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்திய போலீசார், ஆசிரியர் தங்கவேலுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து ஆசிரியர் தங்கவேலு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.