Monday, April 7, 2025

நிற்காமல் சென்ற அரசு பேருந்து : ஓட்டுநர், நடத்துனர் பணியிடை நீக்கம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பேருந்து ஒன்று நிற்காமல் சென்றதால் அதன் பின்னாலேயே பிளஸ் 2 மாணவி நீண்ட தூரம் ஓடினார். சிறிது தூரம் சென்ற பிறகு பேருந்து நிறுத்தப்பட்டது. அதில் மாணவி ஏறினார்.

பொதுத்தேர்வுக்கு சென்ற பிளஸ் 2 மாணவி பேருந்து பின்னால் ஓடிய காட்சி இணையத்தில் வைரலானது. இதையடுத்து அந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Latest news