கோவை மாவட்டம் பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து கிராமப்புறங்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில் பொள்ளாச்சி- மீனாட்சிபுரம் வழித்தட எண் 36 பேருந்து பதிவு எண் TN38 N 2757 பொள்ளாச்சியில் இருந்து அம்பராம்பாளையம் வழியாக மீனாட்சிபுரம் செல்கின்றது. இந்த நிலையில் பேருந்தின் பின்பகுதியில் உள்ள கண்ணாடி மற்றும் பக்கவாட்டில் உள்ள கண்ணாடிகள், இருக்கைகள் அனைத்தும் கயிற்றால் கட்டப்பட்டு எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.