தற்போது ஏஐ நுழையாத துறையே இல்லை எனக் கூறும் அளவிற்கு ஏஐ தொழில்நுட்பம் படிப்படியாக தன்னுடைய கிளைகளை பரப்பி விட்டது. ஏஐ நுட்பத்தின் வளர்ச்சி மனிதர்களின் வேலையை எளிமையாக இருக்கிறது என்றாலும் இது லட்சக்கணக்கான ஊழியர்களின் வேலை வாய்ப்புகளையும் படிப்படியாக பறித்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த ஆண்டில் மட்டும் டெக் நிறுவனங்கள் சுமார் 2 லட்சம் பேரை வேலையில் இருந்து நீக்கி இருக்கின்றன.
ஏஐ தொழில்நுட்பம் நம்முடைய பணிச்சூழல்களை எவ்வாறு மாற்றியுள்ளது என்பது குறித்து கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை பிரபல செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : உலக அளவில் வேலைவாய்ப்பு சந்தை தற்போது பெரிய மாற்றம் அடைந்திருக்கிறது. ஏஐ தொழில்நுட்பம் பல்வேறு வேலைகளை தானியங்கு முறையில் செய்ய தொடங்கிவிட்டது.
இந்த சமூகமும் படிப்படியாக ஏஐ தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ளவும் தொடங்கிவிட்டது. இத்தகைய சூழலில் எந்த ஒரு துறையும் ஏஐ இடம் இருந்து தப்பிக்க முடியாது.
ஏஐக்கு ஏற்ற வகையில் நாம் நம்முடைய திறன்களை மேம்படுத்திக் கொண்டால் பணிநீக்கம் உள்ளிட்டவற்றிலிருந்து தப்பிக்க முடியும் என தெரிவிக்கிறார்.
