Thursday, March 13, 2025

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உலகிற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை எச்சரிக்கை விடுத்துள்ளார்…!

தமிழகத்தை சேர்ந்த கூகுள் நிறுவன தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மனித குலத்தின் எதிர்காலத்தை கட்டமைக்கும் வகையில், அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தும் என கூறினார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தினால் மிகப்பெரிய தீங்கு ஏற்படும் என்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நம்மை தூங்க வைக்கும் எனவும் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவால் உலகிற்கே ஆபத்து ஏற்படலாம் என்றும் ஒவ்வொரு நிறுவனத்திலும் உள்ள ஒவ்வொரு தயாரிப்புகளையும் இது பாதிக்கும் எனவும் எச்சரித்தார்

Latest news