EPFO சொன்ன நல்ல செய்தி!! 3 அதிரடி மாற்றங்கள்!! இனிமேல் PF பணம் எடுக்க நோ டென்ஷன்!!

மத்திய அரசின் Employees’ Provident Fund Organisation (EPFO) அமைப்பு, தனது 7 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்கும் நோக்கில் பல புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, ஊழியர்கள் தங்களது PF (Provident Fund) பணத்தை எளிதாக மற்றும் விரைவாக பெறுவதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

அதில் முக்கியமானதாக, ஏடிஎம் மற்றும் யுபிஐ (UPI) மூலம் PF தொகையை பெறும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது. தற்போது வங்கி சேவைகளில் யுபிஐ பரிவர்த்தனைகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், PF பணத்தையும் அதேபோல் உடனடியாக பெறும் வசதி உறுப்பினர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வங்கி அல்லது EPFO அலுவலகங்களுக்கு செல்வதற்கான தேவையும் குறையும்.

மேலும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்காக முக்கிய மாற்றமும் செய்யப்படுகிறது. ஒரு ஊழியர் ஓய்வு பெற்ற பிறகு, அவருடைய PF கணக்கில் உள்ள முழு தொகையும் தானாகவே அவர் பதிவு செய்த வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் வகையில் “ஆட்டோமேட்டிக் செட்டில்மென்ட்” முறை கொண்டு வரப்படுகிறது. இதனால் PF தொகையை பெறுவதற்கான சிக்கல்கள் குறையும்.

தற்போது பகுதி PF தொகை பெறும் வசதி ஆன்லைன் மூலம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. ரூ.5 லட்சம் வரை கோரிக்கைகள் ஆட்டோமேட்டிக் செட்டில்மென்ட் முறையில் செயல்படுத்தப்பட்டு, விண்ணப்பித்த 3 நாட்களுக்குள் பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இதே முறையை இறுதி PF செட்டில்மென்டிற்கும் விரிவுபடுத்த EPFO நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதுமட்டுமின்றி, ரூ.50 லட்சம் வரை உள்ள இன்சூரன்ஸ் PF கிளைம்களையும் ஆட்டோமேட்டிக் முறையில் செயல்படுத்தும் திட்டம் ஆய்வில் உள்ளது. இந்த புதிய மாற்றங்கள் ஊழியர்களுக்கு PF சேவைகளை மேலும் எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News