இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஸ்டேட் வங்கி ஆஃப் இந்தியா (SBI), வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. அதே சமயத்தில், SBI தனது எம்பிசிஎல்ஆர் (MCLR) விகிதத்தை 5 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. இந்த இரண்டின் இடையேயான வித்தியாசம் என்பதை பார்ப்போம்.
இந்திய மக்களின் கனவு வீட்டை அடைவதற்கு வீட்டுக் கடன் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. தற்போது ஆர்பிஐ வட்டி விகிதங்களை குறைத்து வரும் போது, SBI வீட்டுக் கடன் வட்டியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இந்த புதிய வட்டி உயர்வு எல்லோருக்கும் பொருந்தாது.
இது யாருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று பார்த்தால் குறைந்த கிரெடிட் ஸ்கோர் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். குறைந்த கிரெடிட் ஸ்கோருடைய நபர்கள் அதிக வட்டி செலுத்த வேண்டிய நிலைக்கு வந்து விடுவார்கள். ஆனால் நல்ல கிரெடிட் ஸ்கோர் கொண்டவர்களுக்கு இந்த மாற்றம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.
இதேபோல், யூனியன் வங்கியும் தனது வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. இதனால் மற்ற பொதுத்துறை வங்கிகளும் இதேபோல் கடன் வட்டிகளை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
ஜூலை மாத இறுதியில், SBI-வின் வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் 7.5% முதல் 8.45% வரை இருந்துவந்தன. ஆனால் இப்போது, ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல், புதிய வட்டி விகிதங்கள் 7.5% முதல் 8.70% வரை உயர்த்தப்பட்டுள்ளது.
SBI மற்றும் யூனியன் வங்கியின் இந்த நடவடிக்கைகளை பிற பொதுத்துறை வங்கிகளும் இதே போன்ற நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று கருதப்படுகிறது.