Google Pay, PhonePe பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ் : புதிய வசதி அறிமுகம்

யுபிஐ (UPI) மூலம் பணம் செலுத்தும் முறையில் புதிய மாற்றத்தை என்பிசிஐ (NPCI) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதி தற்போது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன் பயனர்களுக்கு கிடைக்கிறது. முன்பு சில குறிப்பிட்ட செயலிகளில் மட்டுமே இருந்த பயோமெட்ரிக் (biometric) வசதி, இப்போது அனைத்து முக்கிய யுபிஐ செயலிகளிலும் விரிவாக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியை பயன்படுத்த, நீங்கள் பயன்படுத்தும் பேமெண்ட் செயலிகளை (PhonePe, Google Pay, BHIM போன்றவை) புதுப்பிக்க வேண்டும். பின்னர் அந்த செயலியில் “பயோமெட்ரிக் பேமெண்ட்” அல்லது “முகஅடையாளம் மூலம் பணம் செலுத்துதல்” என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு உங்கள் வங்கி கணக்கை தேர்வு செய்து, ஒருமுறை யுபிஐ பின் மூலம் சரிபார்த்தால் இந்த வசதி செயல்படும்.

இந்த புதிய முறையின் மூலம் ரூ.5,000 வரை உள்ள பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ பின் எண்ணை உள்ளிட வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக கைரேகை அல்லது முகஅடையாளம் பயன்படுத்தி உடனடியாக பணம் செலுத்தலாம். இது டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேலும் வேகமாகவும் எளிமையாகவும் மாற்றுகிறது.

ஆனால் இந்த பயோமெட்ரிக் வசதி ரூ.5,000 வரை மட்டுமே பொருந்தும். அதற்கு மேல் பணம் அனுப்பும்போது, வழக்கம்போல யுபிஐ பின் எண்ணை பயன்படுத்த வேண்டும். இதனால் பாதுகாப்பும் வசதியும் சமநிலைப்படுத்தப்படுகிறது.

இந்த மாற்றத்தின் முக்கிய நன்மை வேகமும் சுலபத்தும் ஆகும். பலர் யுபிஐ பின் எண்ணை மறந்து சிக்கலில் சிக்குவதை தவிர்க்கலாம். கைரேகை அல்லது முகஅடையாளம் மூலம் ஒரு தொடுதலில் பணம் அனுப்ப முடியும். இதன் மூலம் யுபிஐ பயன்பாடு இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News