Thursday, July 17, 2025

விவசாயிகளுக்கு குட் நியூஸ் : அக்கவுண்டில் வரப்போகுது 2000 ரூபாய்

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 20ஆவது தவணையாக ரூ. 2000 விவசாயிகளின் கணக்குகளில் ஜூலை 18 முதல் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு உருவாக்கப்பட்டு, அவர்களின் வருமானத்தை மேம்படுத்தும் நோக்கில் மோடி அரசு செயல்படுத்தியுள்ளது.

இதுவரை 19 தவணைகள் வழங்கப்பட்டு, 20வது தவணை வழங்கப்பட உள்ளது. பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கடன் அட்டைகளும் வழங்கப்படுகின்றன. 2025-26 நிதியாண்டில் 2.5 லட்சம் புதிய விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டைகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பணத்தை சரியான நேரத்தில் பெற, விவசாயிகள் தங்கள் கேஒய்சி (KYC) மற்றும் வங்கி விவரங்களை முறையாக புதுப்பித்து சரிபார்க்க வேண்டும். இதற்காக அதிகாரப்பூர்வ இணையதளம் pmkisan.gov.in அல்லது அருகிலுள்ள பொது சேவை மையங்களை அணுகி விவரம் சரிபார்க்கலாம். தவறான பெயர், மொபைல் எண் அல்லது கணக்கு எண் இருந்தால் பணம் வழங்கப்படாது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news