Wednesday, December 17, 2025

விவசாயிகளுக்கு Good நியூஸ்! வங்கி கணக்குக்கு வரும் ரூ.2 ஆயிரம்.. வெளியான முக்கிய அறிவிப்பு!

மத்திய அரசின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான பிரதமர் கிசான் சம்மான் நிதி அதாவது PM-KISAN திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் மூலம், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 செலுத்தப்பட்டு, ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது. இதுவரை 20 தவணைகள் வெற்றிகரமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், 21ஆவது தவணை தொகை இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி உதவியை தொடர்ந்து பெற, விவசாயிகள் விரைந்து தனித்துவ அடையாள எண்ணை அதாவது Unique ID பெற்றிருக்க வேண்டும். இதற்காக, விவசாயிகள் தங்கள் நில உரிமை விவரங்களை ‘விவசாயிகள் பதிவேட்டில்’ பதிவு செய்ய வேண்டும். இதன்மூலம் அவர்களுக்கு தனித்துவ அடையாள எண் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கோவை கொடிசியா வளாகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு தென் மாநில இயற்கை விவசாயிகள் மாநாடு ஆரம்பமாகியுள்ளது. இதனை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி கோவைக்கு வந்தார். மாநாட்டின் போது சிறந்த விவசாயிகள் 18 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, PM-KISAN திட்டத்தின் 21ஆவது தவணையாக 9 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 என, மொத்தமாக ரூ.18,000 கோடி நிதி கோவையில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார்.

இந்த நடவடிக்கை, விவசாயிகளின் நிதி ஆதரவையும், மத்திய அரசின் திட்ட செயல்பாட்டையும் வலுப்படுத்தும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Related News

Latest News