EPFO தற்போது அதன் பயனர்களுக்கு புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது. இதில், UPI அடிப்படையிலான புதிய கிளைம் பிராஸஸ்(CLAIM PROCESS) செயல்முறை மூலம் EPFO உறுப்பினர்கள் விரைவாக PF பணத்தை எடுக்க முடியும். இதன் மூலம், EPFO பயனர்கள் தங்கள் PF கணக்கிலிருந்து ₹1 லட்சம் வரை பணத்தை உடனடியாக வங்கி கணக்கிற்கு மாற்றிக்கொள்ள முடியும். புதிய செயல்முறை, EPFO உறுப்பினர்களுக்கு 2 அல்லது 3 நாட்கள் காத்திராமல், சில மணி நேரங்களில் அல்லது சில நிமிடங்களில் பணத்தை பெற்றுக்கொள்ள உதவும்.
இந்த புதிய முறையில், EPFO உறுப்பினர்கள் PF தொகையை Google Pay, PhonePe போன்ற UPI ஆப்ஸ்களுடன் நேரடியாக தங்களது வங்கி கணக்கிற்கு மாற்ற முடியும். மேலும், இந்த முறையை பயன்படுத்துவதன் மூலம் பயனர்கள் EPFO அலுவலகங்களை சென்று நேரடியாக பத்திரங்கள் நிரப்ப தேவையில்லை. வீட்டிலிருந்து மின்னணுவாகவே விண்ணப்பித்துப் பணத்தை எடுக்கும் வசதி கிடைக்கும்.
மே மாத இறுதிக்குள் இந்த புதிய UPI அடிப்படையிலான கிளைம் பிராஸஸ் செயல்முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் மூலம் EPFO பயனர்களுக்கு PF தொகையை எளிதாக, விரைவாக, மற்றும் தாமதம் இல்லாமல் எடுக்கும் புதிய வாய்ப்பு கிடைக்கும். இதனை மேலும் சாத்தியமாக்க EPFO அதன் கணினி அமைப்புகளை மேம்படுத்தி, 95 சதவீதம் க்கும் மேற்பட்ட கிளைம் செயல்முறைகளையும் தானியக்கமாக செயல்படுத்தியுள்ளது.
EPFO தற்போது ATM கார்டு சேவையையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, இதன் மூலம் EPFO பயனர்கள் EPFO ATM கார்டுகளை பயன்படுத்தி PF தொகையை நேரடியாக ATM-இல் இருந்து எடுக்க முடியும். இந்த புதிய மாற்றங்கள், EPFO உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், மேலும் எளிமையான மற்றும் விரைவான PF தொகை பெறும் முறையை வழங்குகிறது.
இந்த புதிய UPI அடிப்படையிலான PF தொகை எடுக்கும் செயல்முறை EPFO-வின் டிஜிட்டல் மாற்றம் நோக்கத்தை முன்னெடுத்து, பயனர்களுக்கு அதிக வசதிகளை வழங்குகிறது. EPFO பயனர்கள் விரைவில் இந்த சேவையை பயன்படுத்தி PF பணத்தை எளிதாக பெற முடியும்.